16th August 2024 22:18:20 Hours
இராணுவத்தின் இராணுவச் செயலாளரான மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 34 வருட சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 16 ஆகஸ்ட் 2024 அன்று தனது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.
பதிலுக்கு, மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுச் சின்னமாக விசேட நினைவுச் சின்னம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 1989 நவம்பர் 14 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் – பாடநெறி இலக்கம் 07 இல் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக் கொண்டார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி - இரத்மலானை மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் - தியத்தலாவ ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 11 நவம்பர் 1991 அன்று கஜபா படையணிக்கு நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 04 பெப்ரவரி 2023 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து 2024 ஆகஸ்ட் 21 ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, இராணுவச் செயலளர் மற்றும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியாக ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.
அவரது பணியின் போது, அவர் 3 வது கஜபா படையணியின் குழு தளபதி, 3 வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரி, 12 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 6 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, கஜபா படையணியின் பணி நிலை அதிகாரி 2 (வழங்கல்), ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் குழு தளபதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரி 2(நிர்வாகம்), - 211 வது காலாட் பிரிகேட்டின் பிரிகேட் மேஜர், 6 வது படையலகு கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை, சூடான் ஐக்கிய நாட்டு தூதரகத்தின் இராணுவ கண்காணிப்பாளர், 1வது வலுவூட்டல் அ படையலகு கஜபா படையணியின் பதில் கட்டளை அதிகாரி, கஜபா படையணியின் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 1வது கஜபா படையணி பதில் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் செயல்பாட்டு பணிப்பகத்தின் பொது பணி நிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் ஆட்சேர்ப்புப் பயிற்சி பிரவின் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி காரியலயத்தின் பணிநிலை அதிகாரி 1,ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக மருத்துவமனை பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் பீடத்தின் பிரதி பீடாதிபதி, 21 காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் (பொதுப் பணி), இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி கல்வி சார் அதிகாரி, 574 காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி, இராணுவ தலைமையகம் இராணுவ செயலாளர் கிளையின் உதவி இராணுவ செயலாளர் 3, இராணுவ தலைமையகம் இராணுவ செயலாளர் கிளையின் உதவி இராணுவ செயலாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளர் மற்றும் பொறியியில் சேவைகள் படையணியின் படைத் தளபதி உட்பட பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் அவரது அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி ரண விக்கிரம பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரி பர் எக்ஸலன்ஸ் பாடநெறி, பீரங்கி கண்காணிப்பு பாடநெறி , குழு தளபதி பாடநெறி, சிரேஷ்ட கட்டளை பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்சி பாடநெறி இராணுவ அதிகாரிகளுக்கான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, கண்காணிப்பாளர் மற்றும் பணிநிலை அதிகாரி பாடநெறி, கட்டளை அதிகாரிகளின் புத்தாக்கப் பட்டபடிப்பு, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர இளம் அதிகாரிகள் பாடநெறி - பாகிஸ்தான், பரசூட் பாடநெறி - இந்தியா, கனிஷ்ட கட்டளை பாடநெறி - இந்தியா, ஐக்கிய நாடுகளின் இராணுவ நிபுணர்கள் மிஷன் பாடநெறி - பின்லாந்து, படையலகு பாடநெறி மற்றும் பணநிலை - பங்களாதேஷ், தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி - பாகிஸ்தான் உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டபடிப்புகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் இயந்திர பொறியியல் இளங்கலை அறிவியல் (பாதுகாப்பு ஆய்வுகள்), ஜெனரல் சேர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முகாமைதுவத்தில் முதுகலை பட்டம் உட்பட பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத படிப்புகளையும் சிரேஷ்ட அதிகாரி தொடர்ந்துள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நிபுணத்துவ ஆங்கில பாடநெறிக்கான கற்கைகளையும் கற்றுள்ளார்.