16th August 2024 13:36:04 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலையைக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுஎம் பெர்னாண்டோ டப்ளியுடப்ளயுவீ ஆர்டப்ளியுவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2024 ஆகஸ்ட் 13 அன்று பங்கொல்ல 57 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம் செய்தார். இப் படைப்பிரிவு 12 ஆகஸ்ட் 2024 முதல் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்குகின்றது.
வருகை தந்த தளபதியை 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இவ் விஜயத்தின் போது, தற்போது வடமேல் மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்தை மேற்பார்வையிடும் 57 வது காலாட்படை பிரிவின் மீள் வரிசைப்படுத்தல் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதன் போது படைப்பிரிவின் உள்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதன் முன்னேற்றங்களை அவர் எடுத்துரைத்தார் மற்றும் தற்போதுள்ள உட்கட்டமைப்பு, வசதிகள், அணுகல்தன்மை மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு ஆகியவற்றை நெருக்கமாக பார்வையிட்டார்.
இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.