Header

Sri Lanka Army

Defender of the Nation

16th August 2024 13:37:50 Hours

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்திற்கு விஜயம்

இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 13 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்தினை இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

தொடர்ந்து, நிறைவேற்றுப்பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்பகம் பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. படையினருக்கு உரையாற்றியதனை தொடர்ந்து இசை மற்றும் நடனக் குழுவினரின் நிகழ்ச்சிகளை அவர் கண்டுகளித்ததுடன், பணிப்பக வளாகத்தை ஆய்வு செய்தார்.

அதிகாரிகள் மற்றும் பணிப்பகத்தின் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.