16th August 2024 09:28:31 Hours
நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மத்தேகொட சப்பர்ஸ் இல்லத்திற்கு 12 ஆகஸ்ட் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர்.
இலங்கை இராணுவப் பொறியியல் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிசீ பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் படைத் தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.வருகை தந்த அவருக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையும் அணிவகுப்பு சதுக்கத்தில் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் படைத் தளபதி பொறியியல் படைப் பிரிவு, 5 வது களப் பொறியியல் படையணி, பொறியியல் படையணியின் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி, 16 வது பணிமனை பொறியியல் படையணி ஆகியவற்றின் புகழ்பெற்ற வரலாற்றையும் படைப்பிரிவின் பெருமைமிக்க பாரம்பரியத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் ஒழுக்கத்தை பேணுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், இராணுவத்தால் ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு சமீபத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் தங்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
இந் நிகழ்வில் படைத் தளபதி மற்றும் பொறியியல் படைப் பிரிவின் தளபதி ஆகியோருக்கு இடையில் விசேட நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. விஜயத்தின் இறுதியில் படைத் தளபதி தனது கருத்துக்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் விருந்தினர் பதிவேட்டில் தனது கருத்துக்களை கையெழுத்திட்டார்.