16th August 2024 23:22:43 Hours
இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ முதன்மை இணையத்தளமான www.army.lk, ஆனது எல்கே டொமைன் ரெஜிஸ்ட்ரியால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘BestWeb.lk - 2024’ போட்டியில் அரச துறை பிரிவில் ‘மிகவும் பிரபலமான இணையத்தளம்’ விருதைப் பெற்றுள்ளது.
இவ் விருது, அமைச்சகங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவரும் வகையில் சேவைகளை வழங்கும் விதிவிலக்கான செயல்திறன் உள்ளிட்ட அனைத்து தளங்களின் நாடாளுமன்றத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பொது பணி நிலை அதிகாரி (வெப் மாஸ்டர்) 2 கஜபா படையணியின் மேஜர் யூஜீடிஎஸ் உடகே அவர்கள் பார்வையாளர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விருதை பெற்றுக்கொண்டார்.
இராணுவ இணையத்தளம் இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்துடன் இணைந்து இராணுவத் தலைமையகத்தின் ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.