Header

Sri Lanka Army

Defender of the Nation

14th August 2024 15:50:30 Hours

"மித்ர சக்தி" கூட்டுக் களப் பயிற்சி ஆரம்பம்

இந்திய-இலங்கை கூட்டுக் கள இராணுவ பயிற்சியான ‘மித்ரசக்தி’ 2024 ஆகஸ்ட் 24 அன்று மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் ஆரம்ப அணிவகுப்புடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் பயிற்சி பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம அவர்கள் அணிவகுப்பு மரியாதையின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவப் பயிற்சியின் ஆரம்பத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், பயிற்சியில் பங்குபற்றும் இலங்கை மற்றும் இந்தியப் படையினருக்கும் அவர் உரையாற்றினார்.

ஆரம்ப அணிவகுப்பு மரியாதைக்கு 3 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூஎஎன்எஸ்கே வீரக்கொடி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தலைமை தாங்கினார். மேஜர் ஐடபிள்யூஎல்ஆர் கருணாதிலக்க மற்றும் மேஜர் குல்ஜித் பூனவ் ஆகியோர் இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாம் கட்டளைத் அதிகாரிகளாக பணியாற்றினர் என்பது குறிப்பிடதக்கதாகும்.