13th August 2024 14:11:36 Hours
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 08 ஆகஸ்ட் 2024 அன்று 532 வது காலாட் பிரிகேட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு அவரை, 532 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிபீ விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி மரக்கன்று நட்டுவைத்தார்.
நிகழ்வை குறிக்கும் வகையில் அலுவலகத்தின் முன் குழுபடம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.