13th August 2024 14:08:10 Hours
இலங்கை இராணுவப் போர் இலக்கியம் பற்றிய விரிவுரை 10 ஆகஸ்ட் 2024 அன்று இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் 700 அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க அவர்களால் இந்த விரிவுரை நடாத்தப்பட்டது. அவரது விரிவுரையில், தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் 30 ஆண்டுகாலப் போரில் முக்கிய மைல்கற்கள் தொடர்பாக உரையாற்றினார். இந்த விரிவுரையின் மூலம் இராணுவத்தின் மூலோபாய நடவடிக்கைகள் மற்றும் யுத்த பங்களிப்புகள் தொடர்பான தகவல்களால் கேட்போர் பயனடைந்தனர்.