Header

Sri Lanka Army

Defender of the Nation

12th August 2024 13:49:21 Hours

யாழ். தளபதியினால் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விரிவுரை

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 09 ஆகஸ்ட் 2024 அன்று தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் மாணவ அதிகாரிகளுக்கு விரிவுரையை வழங்கினார். தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் "இராணுவ மோதல்களில் புதிய உலக ஒழுங்கின் தாக்கம் மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கான அதன் தாக்கங்கள்" என்ற தலைப்பில் விரிவுரை யாழ் தளபதியினால் நிகழ்த்தப்பட்டது.

சவூதி அரேபியா, பங்களாதேஷ், இந்தியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளுடன் முப்படை மற்றும் போலீஸ் திணைக்களத்தை சேர்ந்த 41 சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விரிவுரையில் கலந்து கொண்டனர். விரிவுரையை தொடர்ந்து யாழ் தளபதிக்கு, கல்லூரியின் தளபதி தனது அலுவலகத்தில் மரியாதை செலுத்தினார்.