11th August 2024 20:55:12 Hours
செவனபிட்டிய நெலும்வெவ உயர்தரப் பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக திட்ட அதிகாரியான பிரிகேடியர் எல்.எச்.எம்.ராஜபக்ஷ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 09 ஆகஸ்ட் 2024 அன்று தலைமை விருந்தினராகப் கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதியின் சார்பாக மாணவர்களுக்கான மாணவ தலைவர் சின்னங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
பாடசாலை வளாகத்தில் பிரதம அதிதியை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். 45 மாணவர்களுக்கு மாணவ தலைவர் சின்னங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.