Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2024 20:53:48 Hours

55 வது காலாட் படைப்பிரிவினால் தரம் 5 புலமைப்பரிசில் கருத்தரங்கு மற்றும் பாடசாலை உதவி பொருட்கள் வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தரம் 5 புலமைப்பரிசில் கருத்தரங்கு 10 ஆகஸ்ட் 2024 அன்று கிளிநொச்சி பூநகரின், ஜெயபுரம் பாடசாலையில் நடத்தப்பட்டது. 22 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரின் உதவியின் கீழ் 552 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சி.டி வெலகெதர யூஎஸ்பீ ஐஜி நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்.

தரம் 5 புலமைப்பரிசில் கருத்தரங்கில் பங்குபற்றிய 251 மாணவர்களுக்கான அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கு ‘ஷா சிலோன்’ உரிமையாளரான திருமதி. ஷர்மிகா குவேஜு நிதியுதவி வழங்கினார். நிகழ்வின் போது ஒவ்வொரு மாணவருக்கும் கற்றல் உபகரணங்கள் மற்றும் போசாக்கு உணவும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள்,பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.