11th August 2024 13:52:31 Hours
படையணிகளுக்கிடையிலான காற்பந்து போட்டி 2024ல் 10 ஜூலை 2024 அன்று பத்தேகன காற்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.
போட்டியில் பதினாறு படையணி அணிகள் பங்கேற்றதுடன் கெமுனு ஹேவா படையணி மற்றும் கஜபா படையணி அணிகளுக்கு இடையே இறுதி போட்டி இடம்பெற்றது. கடுமையான போட்டிக்கு பிறகு கெமுனு ஹேவா படையணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றது.
பிரதம விருந்தினரான மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ச ஆர்எஸ்பீ அவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அணிகளுக்கு விருதுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். கஜபா படையணியின் சிப்பாய் எம்ஜேஆர் முகமது போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய் எம்டீஎஸ் மன்சுக் இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக அங்கீகரிக்கப்பட்டார். சிறந்த பந்து தடுப்பாளருக்கான விருதை கெமுனு ஹேவா படையணியின் காலாட் சிப்பாய் டீஎஸ் பியசன் பெற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் இராணுவ காற்பந்து கழக தலைவர் மேஜர் ஜெனரல் கேஏயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.