Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2024 20:56:24 Hours

மத்திய படை தளபதி 12 வது காலாட் படைப்பிரிவிக்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2024 ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் திகதிகளில் 12 வது காலாட் படைப்பிரிவிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியினை 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அன்புடன் வரவேற்றதுடன் 12 வது கஜபா படையலகினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி அவர்கள் குழு படம் எடுத்துகொண்டதுடன் சந்தன மரக்கன்றினை நட்டு, படையினருக்கு உரையாற்றினார். அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது.

மேலும் தளபதி வெடசிட்டகந்த விகாரையின் பிரதமகுருவினை சந்தித்துடன், பின்னர் 122 , 121 வது பிரிகேடுகளுக்கும் மற்றும் 20 வது இலங்கை சிங்க படையணிக்கும் விஜயம் செய்தார்.