11th August 2024 07:17:02 Hours
இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் மேஜர் எம்ஜீ கபுகேகம அவர்களால் உணவு நுகர்வு தொடர்பான விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இவ் விரிவுரை உணவு நுகர்வு முக்கியத்துவம், ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை வேறுபடுத்துதல் மற்றும் வெவ்வேறு உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பைப் புரிந்துகொள்வது குறித்து படையினரை அறிவூட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விரிவுரையில் பங்குபற்றினர்.