Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2024 07:17:35 Hours

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக பணிப்பாளர் நாயகம் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்டப்ளியூஎஸ் மில்லகல ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்கள் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு 9 ஆகஸ்ட் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த பணிப்பாளர் நாயகத்தை, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் அன்புடன் வரவேற்றார். தனது விஜயத்தின் நினைவாக, மாங்கன்று நாட்டியத்துடன் பயிற்சிபெறும் குழுவினருக்கு உரையாற்றுருகையில் ஐ.நா பணிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

உரையினை தொடர்ந்து, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து தளபதி விளக்கினார். பயிற்சி உட்கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்காக அவர் முகாம் வளாகத்தினை மேற்பார்வையிட்டதுடன் நிறுவனத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்கினார். நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் விஜயம் நிறைவுற்றது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.