Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2024 12:38:52 Hours

இலங்கை இராணுவத்தினரால் வாகன பராமரிப்பு மேம்படுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 2020ல் வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டு கடந்த நான்கு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இலங்கை இராணுவத்தின் 70 வீதமான வாகனங்கள் தற்போது 15 வருடங்களை கடந்துள்ளன. இதற்குப் பதிலாக மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினரால், தற்போதுள்ள வாகனங்களை சீரமைக்கும் செயல்முறையின் மூலம் மேம்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, பல்வேறு அரசு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு, பழுதுபார்ப்புத் தேவையின் காரணமாக கைவிடப்பட்ட வாகனங்கள் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் புதுப்பிக்கப்பட்டன. இராணுவத் தளபதியின் கருத்தின் அடிப்படையில், பல்வேறு அரச நிறுவனங்களின் 09 வாகனங்களும், இராணுவத்தின் 12 வாகனங்களும் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டன.

இந்த திட்டம் 06 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவடைந்தது, இதற்கமைய போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்‌ஷ ஆர்எஸ்பீ, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இஎம்ஜீஎ அம்பன்பொல ஆகியோரின் வழிகாட்டலில் இராணுவ பயன்பாட்டிற்காக 21 வாகனங்கள் கையளிக்கப்பட்டன. இம் முயற்சி இலங்கை இராணுவத்தின் வழங்கல் திறன்களை மேம்படுத்தும் அதே வேளையில் இலங்கைக்கு கணிசமான அளவு அந்நிய செலாவணியை சேமிப்பதாகும்.