10th August 2024 12:36:02 Hours
ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டீஎன் மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி எல்எஸ்சீ ஐஎஸ்சீ அவர்கள் பயிற்சி தணிக்கையை நடத்தும் நோக்கத்துடன் தியத்தலாவை குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலைக்கு 31 ஜூலை 2024 அன்று பயிற்சி ஆய்வினை மேற்கொண்டார்.
குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஆர்பீ முனிபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் பாடசாலையின் பணிநிலை அதிகாரிகள் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் முழுப் பங்கு பற்றிய விரிவான விளக்கத்தை அளித்ததுடன் பயிற்சியின் செயல்பாட்டு அம்சங்கள் தொடர்பான ஏனைய விடயங்களையும் விளக்கினர்.