10th August 2024 12:40:54 Hours
கஜபா படையணியின் ஸ்தாபக தந்தையான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் 32வது ஆண்டு நினைவேந்தல் 2024 ஆகஸ்ட் 08 அன்று கிரிபத்கொட போர்வீரர் சிலைக்கு அருகில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, மறைந்த மேஜர் ஜெனரலின் மகனான கேணல் விமலரத்ன யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். 7வது கஜபா படையணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.