10th August 2024 12:30:21 Hours
3 வது விஜயபாகு காலாட் படையணியின் 35 வது ஆண்டு நிறைவு விழா 3 ஆகஸ்ட் 2024 அன்று 3 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.ஆர் ரணவீர ஆர்டப்ளியூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வளாகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானியும் விஜயபாகு காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹாரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் கலந்துகொண்டார்.
3 வது காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.