Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2024 19:26:58 Hours

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் டி20 ஆசியக் கிண்ணத்தின் வெற்றிக்கான கொண்டாட்டம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஏஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் 2024 ஆகஸ்ட் 5 அன்று மகளிர் டி20 ஆசியக் கிண்ணம் 2024 இல் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில், தொண்டர் படையணியின் தலைமையகத்தில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.

அணியை பிராதிநிதித்துவபடுத்தும் சார்ஜன் டிஎம்எஸ்எம்கே தசநாயக்க, சார்ஜன்ட் டபிள்யூஜிஏகே குலசூரிய, சார்ஜன்ட் என்என்டி சில்வா மற்றும் லான்ஸ் கோப்ரல் எம்ஏஏ சஞ்சீவனி ஆகியோர் விளையாட்டுத்துறையில் சிறப்பான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர். விழாவின் போது அவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் நிதி விருதுகள் வழங்கப்பட்டன.

பெண்கள் கிரிக்கெட்டை உலகளவில் உயர்த்துவதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரித்து, அவர்களின் எதிர்கால சாதனைகளுக்கு தளபதி அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.