Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2024 07:30:06 Hours

மொன்டானா தேசிய பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட தலைவர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு

மொன்டானா அரச பாதுகாப்பு பிரிவின் நிறைவேற்று தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஜே ஹரோனெக் தலைமையிலான மொன்டானா அரச பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட தலைவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 07 ஆகஸ்ட் 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தது.

நான்கு சிரேஷ்ட தலைவர்களை உள்ளடக்கிய தூதுக்குழு, இலங்கை இராணுவத்துடன் இணைந்து மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குதல் உட்பட இராணுவ உறவுகள் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக தளபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதுடன் சந்திப்பு நிறைவு பெற்றது.