Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2024 12:31:46 Hours

வண.கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிச் சடங்கில் இராணுவத் தளபதி

வண.கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகள் 2024 ஆகஸ்ட் 05 ஹுனுப்பிட்டி கங்காராமய விகாரை வளாகத்தில் முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பூரண அரச மரியாதையுடன் பெரும்திரளான மக்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் அரச மரியாதையுடனான இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். பங்கேற்பின் போது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தனது எண்ணங்களையும் தெரிவித்த இராணுவத் தளபதி, கலந்துகொண்ட பலருடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர், பாரளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில்,கடற்படை தளபதி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள்,துணைவியர்கள், அரச அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.