Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2024 10:53:29 Hours

மறைந்த தலைமை தேரரின் உடலுக்கு இராணுவ தளபதி இறுதி அஞ்சலி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து பொடி ஹாமுதுருவோ என அழைக்கப்படும் வண.கலபொட ஞானிஸ்ஸர தேரரின், அவர்களின் பூதவுடலுக்கு 04 ஆகஸ்ட் 2024 அன்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தேரர் தனது 81வது வயதில் காலமானார்.

இராணுவத் தளபதி, வண.கிரிந்தே அசாஜி தேரர் அவர்களிடம் அனைத்து இராணுவத்தினரின் சார்பில் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர் ஒரு மரியாதைக்குரிய நபராக இருந்ததுடன் அவரின் சமூகத்திற்கான பங்களிப்புகள் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டன.

அனுதாபங்களைத் தொடர்ந்து, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரை வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை இராணுவத் தளபதி பார்வையிட்டார்.

இதன் போது இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.