Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2024 16:19:26 Hours

கமாண்டோ வீரர்களின் விடுகை அணிவகுப்பில் இராணுவ தளபதி பிரதம அதிதி

கமாண்டோ பாடநெறி 51 எச்,ஜ மற்றும் ஜே ஆகியவற்றின் விடுகை அணிவகுப்பு 06 அதிகாரிகள் மற்றும் 125 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் குடாஓயா கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையில் 2024 ஆகஸ்ட் 03 அன்று நடைப்பெற்றது.

முதலாம் படை தளபதியும் கமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வருகை தந்த பிரதம அதிதியை படைத்தளதியுடன் இணைந்து கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை தளபதி கேணல் ஆர்ஆர்சி கருணாரத்ன ஆர்டப்ளியூபீ அவர்கள் அன்புடன் வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

விழாவின் போது, பெற்றோர்கள் மற்றும் நெருங்கியஉறவினர்கள் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு கமாண்டோ இலச்சினைகளை பொருத்தினர்.

பின்னர், பிரதம விருந்தினர் படையணி படைத்தளபதி பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, விடுகைபெறும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு, அவர்களின் அடையாளம் மற்றும் தொழில்முறை கண்ணியத்தை அடையாளப்படுத்தும் கபிலநிற தொப்பிகளை அணிவித்தனர்.

பின்னர் கமாண்டோ பாடநெறி முழுவதும் சிறப்பாக செயல்பட்ட படையினருக்கு இராணுவ தளபதி சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

சிறந்த கமாண்டோ விருதை லெப்டினன் ஜி.சி.டி காரியவசம் பெற்றுக்கொண்டதுடன் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் விருது லெப்டினன் ஈடிசி டி சொய்சாவுக்கும் சிறந்த உடற்தகுதி விருது சிப்பாய் பீ.கே.கே.எஸ்.குமாருக்கு வழங்கப்பட்டது.

அணிவகுப்பு சம்பிரதாயங்களுக்குப் பிறகு, இசைக்குழுக் கண்காட்சி மற்றும் கயிறு ஏறுதல் கண்காட்சியும் இடம்பெற்றது. நிகழ்வின் நினைவாக இராணுவ தளபதி குழுபடம் எடுத்துக்கொண்டதுடன் அதை தொடர்ந்து தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது.

பின்னர், டிராப் வலயத்தில், பிரதம விருந்தினர் ஸ்னைப்பர் பிரயோக சுடும் காட்சி, நேருக்கு நேர் துப்பாக்கிச் பிரயோக காட்சி, கமாண்டோ துப்பாக்கி பிரயோக திறன் காட்சி, கமாண்டோக்கள் பயன்படுத்தும் சிறப்பு ஆயுதங்களின் துப்பாக்கிச் பிரயோக காட்சி, கமாண்டே நேரடி சண்டை காட்சி, எச்ஆர் மற்றும் சிடீ காட்சி, விஷேட பிரமுகர் பாதுகாப்பு காட்சி, கே9 நாய்கள் கண்காட்சி ,பரசூட் கண்காட்சி மற்றும் அன்றைய நிகழ்வின் கடைசிப் பகுதியாக, அவர்களின் அயராத பலம், இராணுவத் திறன்கள் மற்றும் முன்னோடியில்லாத சண்டைத் திறன்களைக் காட்டும் நிகழ்வினையும் கண்டுகளித்தார்.

பின்னர் இராணுவத் தளபதி புதிதாக விடுகை பெற்ற கமாண்டோக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உரையாடியதுடன், கமாண்டோ ‘நம்பிக்கையுடனான பாய்தல்’ பகுதியில் உள்ள கமாண்டோ ‘நம்பிக்கையுடனான பாய்தல்’ கட்டுமான தளத்தை ஆய்வு செய்தார்.

மெரூன் ரீச்சில், இராணுவத் தளபதி மற்றும் கமாண்டே படையணி படைத்தளபதியும் கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை தளபதிக்கும் இடையே இராணுவத் தளபதியின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களின் பரிமாற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கமாண்டோ படையணி படைத்தளபதி இராணுவத் தளபதியின் பங்கேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இதையொட்டி, அவரது வருகையை நினைவுகூரும் வகையில் இராணுவத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். மேலும், கமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு விழாவில் கலந்துகொண்டமைக்காக நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

நிகழ்வின் உச்சக்கட்டமாக, பிரதம விருந்தினர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் ஒரு குறிப்பை எழுதினார்.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ மற்றும் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, மதகுருக்கள், முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்பு படை தலைமையக தளபதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் கமாண்டோ படையினரின் நண்பர்கள் ஆகியோர் அன்றைய கண்கவர் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.