31st July 2024 14:27:07 Hours
14 அணிகளின் பங்குபற்றலுடன் 2024 ஜூன் 11 ஆம் திகதி ஆரம்பமான தளபதி கிண்ண படையணிகளுக்கிடையிலான ரக்பி போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு குதிரை பந்தய திடலில் 2024 ஜூலை 30 ஆம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதை பிரிவு தலைவி திருமதி. ஜானகி லியனகே அவர்களுடன் கலந்துகொண்டார். அவர்களை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இராணுவ ரக்பி கழக தலைவருமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இறுதிப் போட்டியில் போது கஜபா படையணி இலங்கை கவச வாகன படையணி அணியுடன் போட்டியிட்டது. சவாலான ஆட்டத்தில் இறுதியில் இலங்கை கவசவாகன படையணி 14-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இராணுவத் தளபதி போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்ததுடன் வெற்றியாளர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வெற்றியாளர்களுக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர், இராணுவத் தளபதி இலங்கை கவசவாகன படையணி வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வழங்கினார். இரண்டாம் இடம் மற்றும் பங்குபற்றிய ஏனைய வீரர்களுக்கான பரிசில்களும் இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியின் சிறந்த ரக்பி வீரராக இலங்கை கவசவாகன படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்என்ஜீ சாலிந்த தெரிவு செய்யப்பட்டார்.
முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது துணைவியர், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் இறுதி போட்டியினை கண்டுகளித்தனர்.