Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2024 12:45:39 Hours

இராணுவ தளபதியினால் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீடு திறப்பு

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு திருமதி எச்.ஜி.சுயிலா நவரத்ன என்பவருக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து 27 ஜூலை 2024 அன்று வழங்கி வைத்தார்.

இப் புதிய வீடு பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஏடிஎச்எம் நுவன் யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்டது. இம்முயற்சி மனுசத் தெரண திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதற்கு தெரண ஊடகம் ஆதரவு அளித்தது.

நிர்மாணத்திற்கான காணியை திரு. அனுரபண்டார, செல்வி. சமந்திகுமாரி, செல்வி அனுலா குமாரிஹாமி, திரு. ரங் பண்டார மற்றும் திருமதி. முத்துமெனிகா குமாரிஹாமி ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். மேலும் பல நபர்களால் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.