26th July 2024 16:34:54 Hours
மறைந்த கேணல் பஸ்லி லாபீர் பீடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மனைவி திருமதி அனோமா லாபீர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 25 ஜூலை 2024 அன்று சந்தித்தார்.
1996 ஜூலை 18 ஆம் திகதி முல்லைத்தீவு இராணுவத் தளத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையின் போது கேணல் பஸ்லி லாபீர் அவர்களின் வீரத் தியாகத்திற்காக நினைவுகூரப்படுகிறார். மீட்புப் பணியை வழிநடத்த தாமாக முன்வந்து அவர், எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் விமானத்தில் வீழ்த்தப்பட்டார். பலத்த காயமடைந்த போதிலும், அவர் போர்க்களத்தில் வெடி தாக்குதலுக்கு உள்ளாகும் வரை தனது படையினரை வழிநடத்தினார்.
1,500 சக படையினரின் உயிரைக் காப்பாற்றிய அவரது அசாதாரண துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு வீரத்தின் மிக உயர்ந்த விருதான “பரம வீர விபூஷணய” வழங்கப்பட்டதுடன் மரணத்திற்குப் பின்னர் கேணல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
சந்திப்பின் போது, மறைந்த கேணல் பஸ்லி லாபீர் பீடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ அவர்கள் ஆற்றிய இணையற்ற சேவையை இராணுவத் தளபதி பாராட்டினார். இறுதியாக இராணுவத் தளபதி திருமதி அனோமா லாபீர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.