26th July 2024 08:13:31 Hours
சப்ரகமுவ மற்றும் ஊவா பகுதிகளுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.சுஜித் வெதமுல்ல அவர்கள் 23 ஜூலை 2024 அன்று மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை சந்தித்தார்.
அவர்களது சுமுக சந்திப்பின் போது, மத்திய பிரதேசத்தின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உத்திகள் குறித்து கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலின் போது சப்ரகமுவ மற்றும் ஊவா பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களுக்கிடையில் பயனுள்ள ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.