Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2024 20:18:24 Hours

பொறியியல் சேவை படையணி படைத் தளபதி 4 வது பொறியியல் சேவை படையணிக்கு விஜயம்

இராணுவச் செயலாளரும் பொறியியல் சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 23 ஜூலை 2024 அன்று 4 வது பொறியியல் சேவை படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

4 வது பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜிஏ பந்துல யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்கள் வருகை தந்த படைத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றார், அதைத் தொடர்ந்து 4 வது பொறியியல் சேவை படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

4 வது பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரி படைத் தளபதிக்கு படையணியின் பணிகள், பொறுப்புகள் மற்றும் அண்மையில் பெற்ற சாதனைகள் குறித்து விளக்மளித்தார் அவர் இராணுவத்திற்கு ஆதரவளிப்பதில் அதன் முக்கிய பங்கை எடுத்துக்காட்டினார். அதனைத் தொடர்ந்து, படைத் தளபதி மரக்கன்று நட்டுவைத்ததுடன் முகாம் வளாகத்தை பார்வையிட்டார். பின்னர், படைத் தளபதி படையணியின் அனைத்து அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துகொண்டதுடன், அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து படையினருக்கு உரை நிகழ்தியதுடன் அங்கு அவர் படையலகின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறையைப் பாராட்டினார்.

விஜயத்தின் முடிவில், சிரேஷ்ட அதிகாரி விருந்தினர் பதிவேட்டில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.