Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2024 16:57:12 Hours

உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பதில் பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இராணுவத் தலைமையக உள்ளக கணக்காய்வு பணிப்பகத்தின் புதிய பதில் பணிப்பாளராக கேணல் ஓஆர் ராஜசிங்க அவர்கள் 2024 ஜூலை 22 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் அனைவருக்கும் உரையாற்றுகையில் எதிர்வரும் ஆண்டுகளில் தனது நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.