23rd July 2024 18:56:52 Hours
புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், பகுதியளவு கட்டப்பட்டுள்ள வீடுகளை நிறைவு செய்வதற்கும் படையினருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு 23 ஜூலை 2024 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
தளபதியின் ரணவிரு வீடமைப்பு நிதியின் 9வது கட்டத்தின் கீழ், படைவீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினால் நிர்வகிக்கப்படும், 15 புதிய வீடுகளுக்கான நிதியை வழங்குவதற்கும், பகுதியளவில் கட்டப்பட்ட 105 வீடுகளை நிறைவு செய்வதற்கும் இராணுவத் தளபதி ஒப்புதல் அளித்தார். புதிய வீட்டை நிர்மாணிக்க நிதி பெறும் ஒவ்வொரு பயனாளிக்கும் 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் அதேவேளை, பகுதியளவில் கட்டப்பட்டுள்ள வீடுகளை நிறைவு செய்ய இந்தத் திட்டத்தின் கீழ் 750,000 ரூபா வழங்கப்படும்.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி மற்றும் படைவீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் டப்ளியூ ஏ எஸ் ஆர் விஜேதாச டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்களினால் வருகை தந்த பிரதம அதிதி வரவேற்கப்பட்டார்.
படைவீரர் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் ரணவிரு வீடமைப்பு நிதி குறித்த அறிமுக விளக்கத்தைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி, இராணுவ பதவிநிலை பிரதானி ஆகியோர் 40 பயனாளிகளுக்கு அடையாளமாக பண காசோலைகளை வழங்கினர். படைவீரர் விவகார பணிப்பகத்தின் கீழ் 2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட ரணவிரு வீடமைப்பு நிதியமானது, காயமடைந்த மற்றும் இன்னும் சேவையில் இருக்கும் படையினர், ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்கள் உட்பட, புதிய வீடொன்றை சொந்தமாக்குவதற்கான கனவை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் தொடக்கத்திலிருந்து, இந்த நிதியானது 309 புதிய வீடுகளைக் கட்டுவதற்கும், பகுதியளவு கட்டப்பட்டுள்ள 223 வீடுகளை நிறைவு செய்வதற்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ, எல்எஸ்சீ அவர்களுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள் மற்றும் இராணுவத்தினரின் உறவினர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.