Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2024 12:14:08 Hours

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக நகர தொழில்நுட்ப வளாகத் திட்ட நிகழ்வில் இராணுவ தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 21 ஜூலை 2024 அன்று தம்புள்ளையில் நடைபெற்ற கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக நகர தொழில்நுட்ப வளாகத் திட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களும் கலந்து கொண்டார்.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் இணைந்து பிரதம அதிதி பதாகையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பிரதம அதிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். அத்துடன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரியர் அட்மிரல் எச்ஜியூடி குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எம்எஸ்சீ கடல்சார் அவர்கள் கூட்டத்திற்கு வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதி பார்வையாளர்களுக்கு உரையாற்றினார். தேசத்தின் இளைஞர்கள் மற்றும் சேவையாளர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் ஆற்றும் முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டினார். மேலும், தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் இத்தகைய நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், நாட்டின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துக் காட்டினார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் மாணவர்களினால் சுற்றாடல் மற்றும் சிறப்பு அறிவியல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

மாத்தளை மாவட்ட அரச அதிபர், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.