Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2024 14:12:21 Hours

இலங்கை கவச வாகனப் படையணி கருத்தரங்கு - 2024 இல் இராணுவத் தளபதி

‘கவச வாகன கருத்தரங்கு – 2024’ ரொக் ஹவுஸ் முகாம் கவச வாகனப் படையணி உணவகத்தில் 19 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கு 'எதிர்கால எல்லைகளை உருவாக்குதல்: மதிப்பீடு மற்றும் புதுமை மூலம் கவச வாகனப் படையணியை மேம்படுத்துதல்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜிடிஎச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கௌரவ அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கு படையணியின் போர் ஆற்றலை மதிப்பிடுதல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆராய்தல், மற்றும் செயல்பாட்டு திறன் மற்றும் மனித காரணிகளை மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குவதன் மூலம் அதிகாரிகளின் அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சவால்களை எதிர்நோக்குவதற்கும், தேசிய பாதுகாப்புக்கு எதிர்கால அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் இந்த முயற்சி முக்கியமான காரணமாக காணப்படுகிறது.

மங்கல விளக்கு ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் இராணுவ மற்றும் கவசப் படையணியின் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. பின்னர் கருத்தரங்கு தொடர்பான ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதி அனைவரையும் வரவேற்றதுடன், பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு பேச்சாளர் ஜெனரல் ஜே. ஜயசூர்ய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோரின் உரை இடம் பெற்றது.

பின்னர், இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியினால் பிரதம அதிதி மற்றும் பிரதம பேச்சாளருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், சிறப்பு விருந்தினர்கள் குழு படமும் எடுத்துக் கொண்டனர்.