Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2024 14:41:04 Hours

இராணுவத் தளபதி கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஜூலை 18 அன்று கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் டபிள்யுஎச்யூடி விஜேரத்ன, இராணுவ மருத்துவமனையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்எம்ஜேபி ரத்நாயக்க ஆர்எஸ்பீ, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.எம்.எம். மொனராகலை யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வருகை தந்த தளபதியை பிரதான நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றனர்.

இராணுவத் தளபதி தனது விஜயத்தின் போது, மருத்துவமனை வளாகத்தை பாரவையிட்டதுடன், வார்டுகள் 05, 08, 09, 15, 16, 17, 18 மற்றும் மருந்தகம் உட்பட பல்வேறு பிரிவுகளையும் ஆய்வு செய்தார். சிப்பாய்கள், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சாஜன்களின் உணவகம் மற்றும் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் இராணுவத் தளபதி நோயாளிகளுக்கு உகந்த சேவையை வழங்க அவற்றின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக சிப்பாய்களின் சமையலறை, மோட்டார் போக்குவரத்து பிரிவு மற்றும் நோயாளிகளின் உணவு களஞ்சியம் போன்றவற்றின் வசதிகளை மதிப்பாய்வு செய்தார். மருத்துவமனை மற்றும் உயிரியல் மருத்துவ பட்டறைக்கான வசதிகளை விரிவுபடுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 15 மாடி கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டார்.

தனது விஜயத்தை தொடர்ந்து, இராணுவத் தளபதி நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் தளபதியை பாராட்டும் விதமாக அவருக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைத்தார். குழு படம் மற்றும் அனைத்து நிலையினருக்குமான தேநீர் ஏற்பாட்டில் இராணுவத் தளபதி பங்கேற்றதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதுடன் இந்த விஜயம் நிறைவுற்றது.

இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சீஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணிப்பாளர் நாயகம் எஸ்ஏஎன்ஜே ஆரியசேன சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.