17th July 2024 18:33:25 Hours
13 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதற்காக இராணுவத் தளபதியும் பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு குழு தலைவருமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ தலைமையில் ஒரு நிர்வாகக் குழுக் கூட்டம் 16 ஜூலை 2024 அன்று நடைபெற்றது.
விளையாட்டுகள் 12 செப்டம்பர் 2024 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வருடம் இந்நிகழ்வை நடத்தும் பெருமையை இலங்கை இராணுவம் பெற்றுள்ளது.
வரவிருக்கும் நிகழ்வுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதும், உலக இராணுவ விளையாட்டுப் போட்டிகளுக்கு முப்படை வீரர்களை தயார்படுத்துவதும் சந்திப்பின் நோக்கமாகும்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, இலங்கை இராணுவ பொது பணி பணிப்பாளர் நாயகம், இராணுவ விளையாட்டு பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கழக செயலாளர், கடற்படை விளையாட்டு பணிப்பாளர், விமானப்படை விளையாட்டு கழக செயலாளர் மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.