17th July 2024 08:33:33 Hours
அண்மையில் நிலை உயர்வு பெற்ற இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல்கள் 16 ஜூலை 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் இஎம்ஜீஎ அம்பன்பொல மற்றும் மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீபீஎஸ்சீ ஆகி ஆகியோரே இவ்வாறு தளபதியினை சந்தித்தனர்.
கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதி ஒவ்வொரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் ஜெனரல் வாளை வழங்கி, அவர்களின் புதிய அதிகாரத்தை அடையாளப்படுத்தியதுடன், அவர்களின் தொழில் சாதனைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் சிரேஷ்ட அதிகாரிகள் தளபதிக்கு நன்றி தெரிவித்ததோடு குழு படங்கள் எடுத்துகொண்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.