16th July 2024 11:51:31 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் 2024 ஜூலை 15 அன்று 'நீலகிரி மகா சேயவில்' புனித தாதுக்களை பிரதிஷ்டை செய்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில்,திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வண. கஹாகொல்ல சோமவன்ஷ தேரர் அவர்களும் உடன் இருந்தார்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் மேற்பார்வையில் இலங்கை விமானப் படை படையினரால் லாஹுகலவில் 'நீலகிரி மகா சேய' தற்போது புனரமைக்கப்படுகின்றது.
மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட ஐந்து கட்டளைகளுடன் முறையான நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வண. அகுல்கமுவ அரியநந்தத் தேரர் தலைமையில் அனுஷாசனம் இடம்பெற்றது. பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உரை இடம்பெற்றதுடன், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து உரையாற்றினார்.
இந் நிகழ்வில் முப்படையில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அவர்களது அன்புத் துணைவியர் மற்றும் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.