12th July 2024 20:16:51 Hours
இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 35 வருட குறிப்பிடத்தக்க பணியின் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் 2024 ஜூலை 12 ஆம் திகதி, அவரது குடும்ப உறுப்பினர்களுடன், இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 1989 ஜனவரி 20 ம் திகதி பாடநெறி இல 31ஏ இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 05 ஏப்ரல் 1991 இல் இலங்கை கவச வாகன படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2023 பெப்ரவரி 04, அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 16 ஜூலை 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வுபெறும் போது, இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ பொது சேவை படையணியின் படைத்தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.
1 வது விஷேட படையணியின் குழு கட்டளை அதிகாரி, 1 வது இலங்கை கவச வாகன படையணியின் குழு கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் குழுத்தளபதி, கவச வாகன படையணியின் தலைமை பயிற்றுவிப்பாளர், 5 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி, ஐ.நா. அமைதி காக்கும் மற்றும் பலதரப்பட்ட கூட்டு நிலைப்படுத்தல் பணி ஹைட்டியின் மேலதிக கட்டளை அதிகாரி, 10 வது இலங்கை கவச வாகன படையணியின் குழு கட்டளை அதிகாரி, 4 வது இலங்கை கவச வாகன படையணியின் குழு கட்டளை அதிகாரி, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கல்வி சார் அதிகாரி, 11 வது காலாட் படைப்பிரிவின் பொதுபணி அதிகாரி 1 (செயற்பாடு), இராணுவ பயிற்சி கட்டளை பிரிவின் கேணல் (மூலோபாய மற்றும் கோட்பாடு), இராணுவ தொடர்பு அதிகாரி- தென் சூடான் ஐக்கிய நாடுகளின் ஸ்திரப்படுத்தல் பணி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர், இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரி, 511 வது காலாட் பிரிகேட் தளபதி, 512 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையகத்தின் உதவி இராணுவச் செயலாளர் – 3, இராணுவ தலைமையகத்தின் உதவி இராணுவச் செயலாளர் – 2, இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி, ஆகிய பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத்தளபதி மற்றும் இராணுவ தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளையும் வகிக்கின்றார்.
சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி ரண விக்கிரம பதக்கம மற்றும் ரண சூர (6 முறைகள்) பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை முடித்துள்ளார், இதில் விஷேட படையணி அடிப்படைப் பாடநெறி, விஷேட படையணி உயர் பாடநெறி, செயல்பாட்டு பணிநிலை கடமைகள் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, அமைதி ஆதரவு நடவடிக்கைகளுக்கு முந்தைய வரிசைப்படுத்தல் பயிற்சி பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் உயர் புதுப்பித்தல் பயிற்சி பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படை பயிற்றுவிப்பாளர் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பாளர் பாடநெறி, கமாண்டோ அடிப்படை பாடநெறி – இந்தியா, அடிப்படை பாராசூட் பாடநெறி – இந்தியா, மத்திய தொழிற்முறை பாடநெறி – பாகிஸ்தான், மின்னியல் பயிற்றுவிப்பாளர் பாடநெறி – இந்தியா, போர் குழு கட்டளை அதிகாரி பாடநெறி –இந்தியா, இராணுவத் தூண்டல் பயிற்சி பாடநெறி – ஹைட்டி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் பாடநெறி- பாகிஸ்தான் என்பன குறுப்பிடத்தக்கவை ஆகும்.
சிரேஷ்ட அதிகாரி கண்டி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அளவையியல் தொழில்நுட்ப டிப்ளோமா, ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ முதுகலை டிப்ளோமா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அனர்த்த முகாமைத்துவத்தில் முதுகலை, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் ஆய்வுகளில் முதுகலை அறிவியல், இகோல் சுபிரியர் ரொபர்ட் டி சோர்போன் பிரான்ஸ் – அனர்த்த மேலாண்மையில் கலாநிதி , ஸ்ரீ பாலி பல்கலைகழகத்தின் பாதுகாப்பு ஊடகம் மற்றும் தொடர்பாடல் பாடநெறி - கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகத்தில் ஜீஐஎஸ் மற்றும் விண்ணப்ப பாடநெறி, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் அமைப்பு பாடநெறி உட்பட பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத கற்கைகளையும் பின்பற்றியுள்ளார்.