11th July 2024 06:14:08 Hours
இராணுவத் தலைமையகத்தின் பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் பீபீஏ பெரேரா எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 34 வருட இராணுவ சேவைக்கு பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 2024 ஜூலை 10 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் பீபீஎ பெரேரா எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் வருமாறு:
மேஜர் ஜெனரல் பீபீஎ பெரேரா எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 1989 நவம்பர் 14 ம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி இல 07 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்துக்கொண்டார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி- தியத்தலாவ ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 14 நவம்பர் 1991 இல் இலங்கை பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 2023 பெப்ரவரி 04, அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 16 ஜூலை 2024 இல் தனது 55 வயதில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வுபெறும் போது, இராணுவ தலைமையகத்தின் பிரதம கள பொறியியலாளராக பதவி வகிக்கின்றார்.
யாழ். 1வது களப் பொறியியல் படையணியின் படை கட்டளையாளர், விரைவு எதிர்வினைக் குழுவின் கட்டளை அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் படை கட்டளையாளர், 6 வது இலங்கை களப் பொறியியல் படையணியின் படை கட்டளையாளர், 6 வது இலங்கை களப் பொறியியல் படையணியின் நிறைவேற்று அதிகாரி, 6 வது இலங்கை களப் பொறியியல் படையணியின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பணி நிலை அதிகாரி 2 (இராணுவப் பயிற்சி), 10வது களப் பொறியியல் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 21 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணி நிலை அதிகாரி 1. (செயல்பாடுகள்), அதிரடி படை 5 இல் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 4வது (தொ) களப் களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, 8வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, படையணி தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 1, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள் ஆய்வு மையத்தின் பயிற்சிக் குழுவின் தலைவர், ஹைட்டி ஐக்கிய நாடு அமைதி காக்கும் பணிக்குழுவின் இராணுவ பணிநிலை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தொடர்பு அதிகாரி அலுவலகத்தின் பணிநிலை அதிகாரி, இராணுவ தலைமையகம் தளபதி செயலகத்தில் கேணல் (தளபதி செயலகம்), இராணுவ பயிற்சி கட்டளை தலைமையகத்தின் கேணல் பொது பணி , 551 வது காலாட் பிரிகேட் தளபதி, பொது பொறியியல் பிரிகேட்டின் தளபதி, தேசிய பாதுகாப்பு கல்லூரியின் செயலாளர், வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், 12 வது காலாட் படைப் பிரிவின் தளபதி , பதவி நிலை பிரதானி காரியாலயத்தின் பதவி நிலை பிரதானி, மற்றும் இராணுவத் தலைமையகத்தில் பிரதம களப் பொறியாளர் உட்பட பல்வேறு நியமனங்களை அவர் தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.
குழு தளபதிகள் பாடநெறி, பீரங்கி கண்காணிப்பு பதவி பாடநெறி, போர் ஓட்டுனர் பாடநெறி (விரைவு எதிர்வினை குழு), பிரிவின் நிர்வாக பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகளின் பாடநெறி, மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் அகற்றல் எம்கே7 வீல்பேரோ பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறி, மனிதாபிமான வெடிகுண்டு அகற்றல் நடவடிக்கை அடிப்படை மேலாண்மை பாடநெறி, அனர்த்த முகாமைத்துவ பாடநெறி, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுக்கரு பதில் நிலை 2 பாடநெறி, பொறியியல் அதிகாரிகளின் அடிப்படை பாடநெறி - பங்களாதேஷ், பொறியியல் போர் பொறியியல் பயிற்றுவிப்பாளர் பாடநெறி இந்தியா, மிட்-கேரியர் பாடநெறி - பாகிஸ்தான், சர்வதேச மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் மேலான்மை பாடநெறி - சீனா, நெதர்லாந்து டிபென்ஸ் ஓரியண்டேஷன் பாடநெறி நெதர்லாந்து மற்றும் உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறி இந்தியா உள்ளிட்ட பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பட்டபடிப்புகளை அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பயின்றுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஜிஐஎஸ் மற்றும் விண்ணப்ப பாடநெறி , ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்வியின் முதுநிலை முகாமைக் கற்கைகள் உஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத், இந்தியா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலைப் பட்டம். போன்ற பல உயர் கல்வி மற்றும் இராணுவம் அல்லாத பட்ட படிப்புகளையும் தொடர்ந்துள்ளார்.