11th July 2024 06:17:49 Hours
அண்மையில் மேஜர் ஜெனரல்களாக நிலை உயர்வு பெற்றவர்கள் 10 ஜூலை 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்எம்பீஎஸ்பி ரத்நாயக்க என்டிசீ, கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ச ஆர்எஸ்பீ, கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வீடிஎஸ் பெரேரா, கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் பீகேடபிள்யூடபிள்யூஎம்ஜேஎஸ்பிடபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கேஎயூ கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்எஎன் ஆரியரத்ன, இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் ஆவர்.
இதன்போது இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அவர்களின் புதிய அதிகாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஜெனரல் வாள் வழங்கி அவர்களின் தொழில் சாதனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் சிரேஷ்ட அதிகாரிகள் தளபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்ததோடு, குழு படங்கள் எடுத்துகொண்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.