10th July 2024 07:55:20 Hours
மேஜர் ஜெனரல் சிஎஸ் டியூகன் வைஎஸ்எம்,ஏடிஜீ எம்ஐ(ஏ) தலைமையில் 4 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவிற்கு 2024 ஜூலை 9 ஆம் திகதி 10வது இந்தியா-இலங்கை இராணுவப் பணிநிலை பேச்சு வார்த்தைக்கு இணையாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சந்திப்பிற்கான அழைப்பு விடுத்தார்.
தூதுக்குழுவில் கேணல் நிதின் யாதவா, கேணல் டிசிடி (ஏ), இந்திய கடற்படையின் கேப்டன் எம்.ஆனந்த் மற்றும் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி எஸ்.எம். ஆகியோர் வருகை தந்தனர்.
கலந்துரையாடலின் போது, பல வருடங்களாக இலங்கை மற்றும் இந்திய ஆயுதப்படைகளுக்கு இடையில் நிலவும் ஒத்துழைப்பை இராணுவத் தளபதி நன்றியுடன் அங்கீகரித்ததோடு பிணைப்புகளை மேலும் வளர்த்து மேலும் பயிற்சித் தொகுதிகளை பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டினார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் பல படங்களை எடுத்து இந்திய சிரேஷ்ட அதிகாரிகள் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவித்தனர். இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நல்லெண்ணச் சின்னமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மற்றும் பயிற்சி பணிப்பக பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.