Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2024 21:34:56 Hours

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானிக்கு பாராட்டு விழா

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை கௌரவிக்கும் முகமாக போயகன விஜயபாகு காலாட் படையணியில் 2024 ஜூன் 28 ம் திகதி கௌரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.

வருகை தந்த பதவி நிலை பிரதானி பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய போர் வீரர் நினைவுச் தூபி மற்றும் பரம விக்கிரம விபூஷண நினைவுத் தூபி ஆகியவற்றில் உயிரிழந்த போர்வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, பதவி நிலை பிரதானிக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், இந்த நிகழ்வின் நினைவாக குழுப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர், பதவி நிலை பிரதானி அவர்கள் படையணி தலைமையக வளாகத்தில் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.