29th June 2024 22:20:03 Hours
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அவர்களின் “இராணுவ தளபதி நாட்டுக்கு அளித்த வாக்குறுதி” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். 2024 ஜூன் 28 ஆம் திகதி நெலும்பொக்குண கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயுதப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
வருகை தந்த பிரதம அதிதியை பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் மரியாதையுடன் வரவேற்றதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கௌரவ. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, முப்படைகளின் முன்னாள் தளபதிகள், புத்தக ஆசிரியரின் குடும்பத்தினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின, அதனைத் தொடர்ந்து கலாநிதி ரிச்சர்ட் டி சொய்சா அவர்கள் புத்தகத்தின் விமர்சனம், புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றிய விளக்கத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார். பின்னர் நூலாசிரியரின் இராணுவ வாழ்க்கை மற்றும் அர்ப்பணிப்பு பற்றி பார்வையாளர்களுக்கு புரிதலை மேம்படுத்தும் வகையில் அறிமுக வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.
மனதைத் தொடும் வகையில் நூலாசிரியரின் இரு மகள்களும் சிறப்பு உரைகள் ஆற்றினர். பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அவர்கள் மேடையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், புத்தகத்தின் முதல் பிரதியை பிரதம அதிதியிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். பிரதம அதிதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், சிறப்பு விருந்தினர்களுக்கு நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சிறப்பு உரையை ஆற்றியதுடன், இந்நூலின் முக்கியத்துவத்தையும் இராணுவ தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றிய தேசத்தைப் புரிந்து கொள்வதில் அதன் பங்களிப்பையும் வலியுறுத்தினார். பின்னர் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பக படையினரின் நடனம் நிகழ்ச்சி அரங்கை வண்ணமயமாக்கியது.
அதன் பின்னர், உரையாற்றிய மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ (ஓய்வு) அவர்கள் தனது உரையில் நூலாசிரியரின் கடந்தகால இராணுவ வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் விழா நன்றியுரையுடன் நிறைவுற்றது.