24th June 2024 21:54:14 Hours
தீகவாப்பிய பாகொடை மற்றும் தூபியின் புனித சர்வ ஞான தாதுகளின் பிரதிஸ்டை விழாவிற்கான ஒருங்கிணைப்பு மாநாடு 24 ஜூன் 2024 அன்று இடம் பெற்றதுடன், இந்த நிகழ்வின் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் தனது உரையில் இந்நிகழ்வின் முதன்மை நோக்கம் பற்றி கோடிட்டுக் காட்டினார்.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
விழாவை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பல முக்கியமான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன. தாதுமந்திரய மற்றும் விஹாரமந்திரயவை திறந்து வைப்பது, பக்தர்களின் வசதிக்காக பக்தர்களுக்கு தங்குமிடம், அன்னதான மண்டபம் அமைத்தல், மின்சாரம் மற்றும் தேவையான ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்தல், நிகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகள், பங்கேற்பாளர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவை தொடர்பில் மாநாட்டின் போது கலந்துரையாடப்பட்டன.
நிறைவில், புனித சர்வ ஞான தாதுகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லல் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல் ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.