23rd June 2024 10:03:00 Hours
திரப்பனை கட்டமுறிச்சான், தீபடுத்தாராம விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாகொடை 22 ஜூன் 2024 அன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வருகை தந்த பிரதம அதிதியை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 21 வது காலாட் படைப்பிரிவு தளபதி எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். வரவேற்பில் கலாசார நிகழ்வாக பாரம்பரிய நடனக் குழுவின் நிகழ்ச்சியும் வண்ணம் சேர்த்தது.
விகாரையின் பிரதமகுருவான வண. தலவே ஜினரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் இராணுவத் தளபதி பாகொடை மற்றும் பதாகையை திரைநீக்கம் செய்யப்பட்டமை நிகழ்வின் சிறப்பம்சமாகும். இதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாகொடைக்கு அட்டபிரிகரை வழங்கினார். திரு.நளிந்த ஹேரத் அவர்கள் இந்த கட்டுமானத்திற்காக நிதியுதவியை வழங்கினார். அவர் இந்நிகழ்வில் மங்கல விளக்கை ஏற்றியதுடன் ஆரம்ப உரையை ஆற்றினார்.
இராணுவத் தளபதி அவர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, நிர்மாணப் பணிகளுக்குப் பங்களித்த நபர்களுக்கு பாராட்டுச் சின்னங்களை வழங்கினார். இத்திட்டத்திற்கு மனிதவளத்தை வழங்கிய இராணுவத்தினருக்கு விசேட பரிசில்களும், கட்டமுறிச்சான் பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக 250,000.00 ரூபா நன்கொடையும் வழங்கினார். கலாசார நிகழ்வுகளுடன் பார்வையாளர்களை மகிழ்வித்த கலைஞர்களையும் இராணுவத் தளபதி ஊக்குவித்தார்.
இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிபர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.