Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd June 2024 09:59:09 Hours

இராணுவத் தளபதியினால் சந்தஹிரு சேயா பொசன் வலயம் திறந்து வைப்பு

2024 சந்தஹிரு சேயா பொசன் வலயத்தின் ஒளியேற்றும் நிகழ்வு அனுராதபுரத்தில் 2024 ஜூன் 21 ஆம் திகதி மாலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்ன தானத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அத்துடன் அனுராதபுரம் புனித தலத்திற்குள் பக்தர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வும் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் புனித இடத்திற்கான மரியாதையைக் குறிக்கும் வகையில் கிழக்கு "சலபத்தலமலுவ" நுழைவாயிலில் உள்ள பிரதான புத்தர் சிலைக்கு மலர்கள் மற்றும் அஷ்டபான (எட்டு வகையான மருந்து திரவங்கள்) படைத்து வணங்கினர்.

பின்னர், சந்தஹிரு சேயா போசன் வலயம் மற்றும் சமய கலாசார காட்சிகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியில் அனைவரும் கலந்து கொண்டனர். இருள் நீங்கி ஆன்மிக ஞானம் பெறுவதைக் குறிக்கும் வகையில் மங்கல விளக்கு சம்பிரதாயபூர்வமாக ஏற்றப்பட்டதுடன், பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

பின்னர், பிரதம விருந்தினர் மற்றும் பிற முக்கியஸ்தர்களால் 'வாங்ககிரிய' சம்பிரதாய விளக்கேற்றல் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் 'வாங்ககிரிய'வை அதன் மத முக்கியத்துவத்தை உள்வாங்கிக் கொண்டனர்.

பங்கேற்பாளர்களிடையே தோழமை மற்றும் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை வளர்க்கும் நோக்கத்துடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.இந்நிகழ்வில் மதகுருமார்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிபர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.