22nd June 2024 11:48:34 Hours
பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுராதபுரம் சந்தஹிரு சேய பொசன் வலய திறப்பு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 21 ஜூன் 2024 அன்று காலை கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் அவர்கள் கலந்து கொண்டார். திகவாபிய விகாரைக்காக அமைக்கப்பட்டுள்ள சந்தஹிரு சேய தூபியை சுற்றி புத்த பெருமானின் புனித நினைவுப் பெட்டகங்களின் சம்பிரதாய ஊர்வலத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து, பிரதம விருந்தினர் புத்தரின் புனித நினைவுப் பெட்டகத்தை பொது வணக்கத்திற்காக விகாரை அறையில் வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து சிறப்பு விருந்தினர்களும் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், சம்பிரதாய பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் பின்னர் பிரதம அதிதி தபுத்தேகம வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
மகா சங்கத்தினரின் சிறப்பு சொற்பொழிவின் (அனுசாசனம்) பின்னர் ஆன்மீக தளத்தில் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்ன தானத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிபர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.