Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2024 16:10:06 Hours

இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் நியமனம்

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் வியாழன் (20) அன்று இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் 64 வது இராணுவ பதவி நிலை பிரதானியாக தனது நியமனக் கடித்தை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடமிருந்து தளபதி அலுவகத்தில் பெற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் இந் நியமனத்திற்கு முன் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத்தளபதியாகவும் கடமையாற்றினார்.

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களின் விவரம் பின்னவருமாறு:

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் 1969 செப்டம்பர் 16 அன்று பிறந்ததுடன் அவர் குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவருமாவார். அவர் 1988 ஜூலை 26 ஆம் திகதி தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி 31 ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இலங்கை நிரந்தர படையணியில் இணைந்துகொண்டார். தொடர்ந்து, இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவுசெய்தார். பின்னர் சிரேஷ்ட அதிகாரி இரண்டாம் லெப்டினன் நிலையில் விஜயபாகு காலாட் படையணியில் 05 ஒக்டோபர் 1990 அன்று நியமிக்கப்பட்டார். 35 ஆண்டுகளுக்கும் மேலான அவரது தொழில் வாழ்க்கை முழுவதும், அவர் வகித்த பல கட்டளை, பணிநிலை மற்றும் அறிவுறுத்தல் நியமனங்கள் மூலம் அவர் அனுபவம் மற்றும் திறன்களை பெற்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி தனது ஆரம்பகாலத்தில் படையலகு கட்டளை அதிகாரி, புலனாய்வு அதிகாரி, மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி போன்ற படையலகு மட்டத்தில் நியமனங்களை வகித்தார். மேலும் அவர் 4 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரியாக பதவிவகித்தார். 571 மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 58,11 வது காலாட் படைப்பிரிவு தளபதி போன்ற பல்வேறு திறன்களின் கீழ் பல்வேறு இடங்களில் தனது சேவையை வழங்கினார். இலங்கை இராணுவத்தை சீர்ப்படுத்தும் வகையில் பயிலிளவல் அதிகாரிகளை வளர்பதில் அறிவையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொண்ட சிரேஷ்ட அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரி பயிற்றுவிப்பாளராக, குழு கட்டளை அதிகாரி , நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் பயிலிளவல் அதிகாரி பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும், சிரேஷ்ட அதிகாரி, காலாட்படை பயிற்சி நிலையத்தில் சிறப்பு இளம் அதிகாரிகள் பாடநெறி ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், சிரேஷ்ட அதிகாரி மாதுருஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதியாக கடமையாற்றியுள்ளார்.

சேவையில் அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கையை செழுமைப்படுத்திய அவர், பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் பாடநெறி, போக்குவரத்து முகாமைத்து அதிகாரி பாடநெறி, கனிஷ்ட கட்டளை அதிகாரி பாடநெறி, சீனவில் காலாட் படையலகு பாடநெறி போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி அவருக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் என்பன வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரியுமாவர். அவர் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பட்டதாரி ஆவார். மேலும் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் திருமதி துஷார யட்டிவாவலவை மணந்து இரண்டு பெண் பிள்ளைகளால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார்.