20th June 2024 12:49:34 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மாத்தளை – கொட்டுவேகெதர சுதர்மோதயா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட சன்னதியை அனுருத்த ஆராண விகாரையின் பிரதமகுரு வண. முகுனுவெல அனுருத்த தேரர் அவர்களுடன் இணைந்து 19 ஜூன் 2024 அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை மாத்தளை – கொட்டுவேகெதர சுதர்மோதயா விகாரையின் பிரதமகுருவான மஹாலபொத்துவே விமலதம்ம தேரர் அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் அறங்காவல் சபை உறுப்பினர்கள் இணைந்து மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ நடனக் குழுவினால் புதிதாகக் கட்டப்பட்ட விகாரை சன்னதிக்கு தளபதி அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர், தளபதி அவர்கள் பதாகையை திரைநீக்கம் செய்து விகாரை சன்னிதியை திறந்து வைத்தார்.
பின்னர், பிரதான நிகழ்விற்கு இணையாக வண. இலுக்கும்புர ஷசனாரதன தேரர் மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களால் புதிய 'போதி பிரகாரய' (பாதுகாப்பு சுவர்) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பௌத்த மத சம்பிரதாயத்திற்கு பின்னர் மங்கல விளக்கேற்றப்பட்டதுடன் மஹாலகொடுவே விமலதம்மாபிதான தேரர் அவர்களால் சுருக்கமான வரவேற்பு உரை மற்றும் சிறப்பு சொற்பொழிவும் (அனுசாசனம்) ஆற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி அவர்கள் சிறப்புரையாற்றியதுடன், புதிய விகாரை சன்னிதிக்கு உதவி வழங்கிய நபர்களுக்கு விசேட நினைவுச் சின்னங்களையும் வழங்கினார். இதன் நிறைவில் கொட்டுவேகெதர சுதர்மோதயா விகாரையின் விகாராதிபதி மற்றும் இராணுவத் தளபதிக்கும் இடையில் விசேட நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வில் மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கௌசல்யா எஸ்டி திசாநாயக்க, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.