08th June 2024 20:19:55 Hours
மேற்கு பாதுகாப்புப் படையினால் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு 02 ஜூன் 2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒன்றிணைப்பு அவர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும், சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகம், இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகம், ஆளனி நிர்வாக பணிப்பகம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் இராணுவ வைத்திய சேவை பணிப்பகம் ஆகிய இராணுவ தலைமையகத்தின் ஏழு பணிப்பகங்கள் போர் வீரர்களுக்கு தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும் அவர்களின் விடயங்களுக்கு உதவும் பொருட்டும் பிரசன்னமாகி இருந்தன.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியை மரியாதையுடன் வரவேற்றார். இராணுவ நலன்புரி மற்றும் புனர்வாழ்வு செயல்முறைகள் பற்றிய சிறு ஆவணப்படம் பங்கேற்பாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இராணுவ கீதம் இசைக்கப்பட்டதுடன், உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது உரையின் போது, வீரமரணமடைந்த போர் வீரர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காகக் கூடியிருந்தவர்களை பாராட்டினார். இராணுவத்தினரின் துணிச்சலையும் ஒழுக்கத்தையும் அவர் பாராட்டியதுடன், பங்கேற்பாளர்களுக்கு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பும் வழங்கப்பட்டது.
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், 610 போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.